தமிழகத்தில் வணிகத் தொழில் அமைப்புகளுக்கான புதிய மின் கட்டணம் அமல்..!
வணிகம் மற்றும் தொழில் அமைப்புகளுக்கான மின் கட்டணம் அமலுக்கு வந்துள்ளது. தமிழகத்தில் வணிக மற்றும் தொழில் நிறுவனங்களுக்கான புதிய மின் கட்டணம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஒரு யூனிட்டுக்கு 13 பைசா முதல் 21 பைசா வரை மின்கட்டணம் உயர்ந்துள்ளது. வீட்டு இணைப்பு நுகர்வோருக்கு ஏற்படும் 2.18 சதவீத உயர்வை அரசே ஏற்கும் என தெரிவித்துள்ளது. அரசின் இந்த நடவடிக்கையால் வீட்டு இணைப்புகளுக்கு எவ்வித கட்டண உயர்வும் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேளாண் இணைப்புகள் குடிசை இணைப்புகள் வீடுகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





