கோயில் திருவிழாவில் ஆபாச நடனம்..!
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே கோயில் திருவிழாவில் ஆபாச நடனம் ஆடிய விவகாரத்தில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். முத்துப்பேட்டை இடுவாவனம் காமாட்சி அம்மன் கோயிலில் கடந்த 23ஆம் தேதி திருவிழா நடைபெற்றது.
அதில் ஒருங்கிணைக்கப்பட்ட இசை கச்சேரியில் ஆபாச நடனம் ஆடப்பட்டது பக்தர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்த கிராம தலைவர் கண்ணையன், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர், நடன கலைஞர் ஆகியவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
விசாரணைக்கு பின் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கோயில் திருவிழாக்களில் இசை நிகழ்ச்சி என்ற பெயரில் ஆபாச நடனம் ஆடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





