--- --:--:-- --

துணிக்கடையில் உடை மாற்றும் அறையில் மேலே இருந்த செல்போன்..!

5

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் உள்ள பிரபல துணைக்கடையில் உடை மாற்றும் அறையில் செல்போன் இருந்தது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

கடையில் வாங்கிய துணியை போட்டு பார்ப்பதற்காக இரண்டு பெண்கள் உடைமாற்றும் அறை வரை சென்றுள்ளனர். அப்போது அந்த அறையில் செல்போன்  இருந்ததை கண்டு அதிர்ந்து போயுள்ளனனர்.

 

அப்போது அருகில் இருந்த பெண் அங்கிருந்து செல்போனை எடுத்துக் கொண்டு வெளியேறியுள்ளார். இதனையடுத்து துணி கடையில் இருந்த ஊழியர்கள் அந்த பெண்ணை மடக்கி பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon