சீட்டு நிதி நிறுவனம் மூலம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்த பெண்..!
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியில் சீட்டு நடத்தும் நிறுவனம் மூலம் பணமோசடியில் ஈடுபட்ட பெண்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அமுதா என்பவர் கடந்த ஒரு வருட காலமாக ஆரணி, வாலாஜா ராணிப்பேட்டை ஆகிய பகுதிகளில் வெவ்வேறு பெயர்களில் நிதி நிறுவனம் நடத்தி வந்திருக்கிறார். இவ்வாறு பலரிடம் பல லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுக் கொண்டு மோசடியில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தன.
இது குறித்து கிடைத்த தகவலின் பெயரில் அமுதா மீது வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





