--- --:--:-- --

இரட்டை குழந்தைகளுடன் எட்டாவது மாடியில் இருந்து குதித்து தாய் விபரீத முடிவு..!

5

தெலுங்கானாவில் வரதட்சணை கொடுமையால் பெண் தனது இரட்டை குழந்தைகளை எட்டாவது மாடியில் இருந்து தூக்கி வீசி கொலை செய்துவிட்டு தானும் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

 

செகந்திராபாத்தில் உள்ள பன்சிலாமேட் பகுதியை சேர்ந்தவர்கள் கணேஷ் – சௌந்தர்யா தம்பதி. இவர்களுக்கு மூன்றாண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆன நிலையில் ஒன்றை வயதில் நித்யா – நிதர்ஷ் என்ற இரட்டை குழந்தைகள் இருந்தன.

 

முடி திருத்தம் தொழில் செய்து வரும் கணேஷ் கூடுதல் வரதட்சனை கேட்டு அடிக்கடி சவுந்தர்யாவை துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு குழந்தைகளுடன் தாய் வீட்டிற்கு சென்று அங்கேயே தங்கியிருந்த சௌந்தர்யா நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தாய் வீடு இருக்கும் எட்டு அடுக்குமாடி குடியிருப்பின் உச்சிக்கு சென்று குழந்தைகளை கீழே வீசி கொன்றுவிட்டு தானும் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

 

வரதட்சணை கொடுமையால் சௌந்தர்யா விபரீத முடிவு எடுத்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததை எடுத்து அவரது கணவர் கணேஷை போலீசார் கைது செய்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon