--- --:--:-- --

பள்ளிகளுக்கு 26 ஆம் தேதி வரை மீண்டும் விடுமுறை..!

9

சுட்டெரிக்கும் வெயிலின் காரணமாக சத்தீஸ்கரில் பள்ளிகளுக்கான கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. சத்தீஸ்கரியில் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் 16ஆம் தேதி திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

 

ஆனால் மாநிலத்தில் கோடை வெயில் தாக்கம் இன்னும் குறையவில்லை. அத்துடன் வெப்பம் நீடிப்பதால் மக்கள் பெரும் துயரத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

 

எனவே மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பை மாநில அரசு தள்ளி வைத்திருக்கிறது. அதன்படி வருகிற 26 ஆம் தேதி வரை கோடை விடுமுறை நீட்டிக்கப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.

 

முதலமைச்சர் பூபேஷ் அறிவிப்பில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும் இது தொடர்பாக மாநில கல்வித்துறை விரைவில் அறிவிப்பை வெளியிடவும் எனவும் மாநில அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

Right Menu Icon