--- --:--:-- --

சாலை விபத்தில் கைக் குழந்தையுடன் சிக்கிய பெண்.. ஓடோடி வந்து மீட்ட காவல் கண்காணிப்பாளர்..!

5

நாகையில் சாலையோரத்தில் கைக்குழந்தையுடன் சிக்கிய பெண்ணை மீட்டு காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷினி காவல்துறை வாகனத்தின் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

 

குறுக்கத்தியை சேர்ந்த பெண் ஒருவர் தனது கைக்குழந்தை மற்றும் மாமியாருடன் நாகை நோக்கி ஆட்டோவில் சென்றுள்ளார். புத்தூர் ரவுண்டானா அருகே ஆட்டோ விபத்தில் சிக்கியது.

 

அப்பொழுது அந்த வழியே வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷினி உடனடியாக தனது காரை விட்டு இறங்கி குழந்தையையும் தாயையும் காவல்துறை வாகனத்தில் முதலுதவிக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon