--- --:--:-- --

காதலியை பார்க்க வந்த காதலனுக்கு நேர்ந்த கதி.. காதலி தற்கொலை..!

6

திருச்சி மாவட்டத்தில் காதலியை பார்ப்பதற்காக நள்ளிரவில் சென்ற காதலன் ஊர் மக்களிடம் சிக்கியதால் காதலி தற்கொலை செய்து கொண்டார். சங்கவி என்பவர் மணல்மேடு பகுதியை சேர்ந்த ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

 

சனிக்கிழமை நள்ளிரவு காதலியை பார்ப்பதற்காக வந்தவரை அந்த பகுதியினர் பிடித்து தாக்கியதாகவும் அவர்களிடம் இருந்து தப்பிக்க தான் சங்கவியை பார்க்க வந்ததாக அந்த நபர் தகவலை தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

 

காதல் பற்றி தெரிய வந்ததை எடுத்து சங்கவியை அவரது குடும்பத்தினர் திட்டியதாக தெரிகிறது. இதையடுத்து சங்கவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

 

உடனே குடும்பத்தினர் போலீசார் கூறிய தகவலை தெரிவிக்காமல் இறுதி சடங்கிற்கான பணிகளில் இறங்கினர். தகவல் அறிந்த போலீசார் சங்கவி வீட்டிற்கு சென்று சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon