--- --:--:-- --

12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கிறது..!

4

ள்ளிக்கல்வித்துறையில் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர் பணியிடங்களை காலியாக வைத்திருப்பதற்கு தமிழக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து அவர் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் தமிழக முழுவதும் சுமார் 435 உயர்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்களும், நடுநிலைப் பள்ளிகளில் நூற்றுக்கணக்கான தலைமை ஆசிரியர்கள் பணியிடங்களும் காலியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன எனவும் 12000-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருந்தும் அவற்றை நிரப்ப ஏதுவாக லட்சக்கணக்கான ஆசிரியர்கள் வேலையில்லா பட்டதாரிகளாக இருந்தும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அலட்சியம் காட்டுவதாக விமர்சித்துள்ளார்.

 

ஏற்கனவே அறிவித்தபடி இந்த முறையாவது ஆசிரியர் கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும் என்றும் தமிழக அரசு எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon