--- --:--:-- --

கார் – பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து..10 பேர் உயிரிழப்பு..!

3

கர்நாடகாவில் காரும் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்திற்கு உள்ளானதில் 10 பேர் உயிரிழந்தனர். கர்நாடக மாநிலம் குருகுர் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார் மீது எதிரே வந்த தனியார் பேருந்து மோதியது.

 

இந்த விபத்தில் காரில் பயணித்த மூன்று குழந்தைகள் உட்பட 10 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். இதில் அந்த இரண்டு வாகனங்களும் நொறுங்கி சேதமடைந்தன. தகவலறிந்து நிகழ்வடத்திற்கு வந்த காவல்துறையினர் விபத்தில் படுகாயம் அடைந்த மூன்று பேரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

 

இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நிவாரண நிதியிலிருந்து முதல்வரின் நிவாரண நிதியிலிருந்தும் தலா 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடியும், முதலமைச்சர் சித்தராமையாவும் அறிவித்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon