பாஜகவுடன் திமுக கூட்டு சேருமா? முதலமைச்சர் ஸ்டாலின் அளித்த விளக்கம்..!
அதிமுக இப்போது நான்கு அணிகளாக பிரிந்து கிடப்பதாகவும் அதைப்பற்றி தங்களுக்கு கவலை இல்லை என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
அவர்களது பலவீனத்தால் தாங்கள் அரசியல் செய்யவில்லை என்றும் தங்களது கோரிக்கைகளையும் தொண்டர்கள் பலத்தையும் நம்பியே எப்போதும் இருப்போம் எனவும் கூறினார்.
அத்துடன் கருணாநிதி காலத்தில் நிகழ்ந்ததைப் போல பாரதிய ஜனதா கட்சியுடன் திமுக கூட்டு சேர வாய்ப்பு இல்லை என்றும் தெரிவித்தார். மேலும் வாஜ்பாய் தலைமையிலான அன்றைய பாஜகவுக்கும் இன்றைய பாஜகவுக்கும் வேறுபாடு உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





