ரூ.2000 நோட்டை வாங்க மறுத்ததால் டாஸ்மாக் ஊழியருடன் வாக்குவாதம்..!
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே மதுக்கடையில் 2,000 ரூபாய் நோட்டை டாஸ்மாக் ஊழியர் வாங்க மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பெருமச்சூரில் உள்ள மதுக்கடையில் ஒருவர் 2,000 ரூபாய் நோட்டை கொடுத்து மதுபானம் வாங்க முயற்சித்துள்ளார்.
டாஸ்மாக் ஊழியர் அதை வாங்க மறுத்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பிறகு மதுக்கடை முன்பாக 2000 ரூபாய் நோட்டுடன் மது குடிப்போர் போராட்டம் செய்தனர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அவர்களை அப்புறப்படுத்தினர்.
பின்னர் 2000 ரூபாய் நோட்டுகளை வாங்கவில்லை என்றால் அறிவிப்பு பலகை வைக்குமாறு டாஸ்மாக் ஊழியர்களை அறிவுறுத்தினர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





