--- --:--:-- --

பெண் தர மறுத்ததால் ஆத்திரம்.. பெற்றோர் மீது துப்பாக்கி சூடு..!

1

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே பெண் தர மறுத்த பெண்ணின் பெற்றோரை துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பிச்சென்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். கடையம் கிராமத்தை சேர்ந்த கோவிந்தன் – கலையம்மாள் தம்பதியின் மகளை  இளைஞர் பெண் கேட்டு சென்றுள்ளார்.

 

இதற்கு அவர்கள் மறுப்பு தெரிவிக்கவே  நாட்டு துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பி சென்று விட்டார். இதையடுத்து அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

 

கடந்த 24 மணி நேரமாக கடையம் கிராமத்தில் உள்ள காப்பு காட்டில் பாரதியை தேடும் பணிகளில் ஈடுபட்ட போலீசார் இன்று விடியற்காலை வனப்பகுதியில் உறங்கிக் கொண்டிருந்த பொழுது கைது செய்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon