--- --:--:-- --

தமிழ்நாட்டில் வரும் 22ம் தேதி வரை ஒரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு..!

1

தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் வரும் 22ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

மேற்கு திசை காற்று மற்றும் வெப்பச் சலனம் காரணமாக மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 

அடுத்த இரண்டு நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும் எனவும் அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது வெப்ப அழுத்தம் காரணமாக அசௌகரியம் ஏற்படலாம் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon