--- --:--:-- --

கல்லூரி மாணவரை தாக்கிய காவல் ஆய்வாளரை முற்றுகையிட்ட பொதுமக்கள்..!

4

வேலூரில் கல்லூரி மாணவரை தாக்கியதாக காவல் ஆய்வாளரை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு எதிரே காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

 

அப்பொழுது குப்பத்தா கோட்டுரை சேர்ந்த தினேஷ் என்ற கல்லூரி மாணவர் தமது நண்பர்களுடன் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். அவரிடம் காவல்துறையினர் ஆவணங்களை கேட்டுள்ளனர். இதை அவர் காண்பித்த நிலையில் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததாக கூறப்படுகிறது.

 

அனைத்து ஆவணங்களும் சரியாக உள்ள நிலையில் எதற்காக அபராதம் செலுத்த வேண்டும் என மாணவர் கேட்டதாக தெரிகிறது. இது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் ராமச்சந்திரன் மாணவரை தாக்கியதாக சொல்லப்படுகிறது.

 

இதனையடுத்து நிகழ்விடத்திற்கு வந்த மாணவரின் உறவினர்கள் காவல் ஆய்வாளரை முற்றுகையிட்டனர். அவர்களுடன் பொதுமக்கள் சிலரும் சேர்ந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய டி எஸ் பி திருநாவுக்கரசு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை எடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon