--- --:--:-- --

அதிவேகமாக வந்த பஸ்.. அடுத்தடுத்து இடிக்கப்பட்ட வாகனங்கள்..!

8

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே டேங்கர் லாரி மற்றும் இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதியதில் நடத்துனர் உள்ளிட்ட நான்கு பேர் உயிரிழந்தனர். திருத்துறைப்பூண்டியிலிருந்து சென்னை நோக்கி வந்த அரசு சொகுசு பேருந்து சீர்காழி புறவழிச் சாலையில் பாகற்குடி அருகே எதிராக வந்த இருசக்கர வாகனம் மீது மோதியது.

 

அதை தொடர்ந்து கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் நின்று இருந்த டேங்கர் லாரி மீது மோதியது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர், பேருந்து நடத்துனர் ஆகிய நான்கு பேர் உயிரிழந்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon