தி கேரளா ஸ்டோரி திரைப்படம் குறித்து இன்று பரபரப்பு விசாரணை..!
மேற்கு வங்கத்தில் கேரளா ஸ்டோரி திரைப்படத்தை தடை செய்ததற்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. சர்ச்சைக்குரிய தி கேரளா ஸ்டோரி திரைப்படம் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு தமிழகம், கேரளா, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு இருந்தது.
இந்த படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று இஸ்லாமிய அமைப்புகளும் வலியுறுத்தின. மேற்கு வங்கத்தில் கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு மாநில அரசு தடைவித்தது. இதனையடுத்து படத்தின் தயாரிப்பாளர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதில் திரைப்படத்திற்கு சென்சார் சான்றிதழ் அளித்த பிறகு படத்திற்கு தடை விதிக்க மாநில அரசு அதிகாரம் இல்லை என்றும், திரைப்படத்திற்கு சட்டம் ஒழுங்கை காரணமாக காட்ட முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும் இந்த கேரளா ஸ்டோரி திரைப்படம் தொடர்பாக தமிழ்நாடு அரசு தியேட்டர் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை காரணமாக திரைப்படம் திரையிடப்படாமல் மறைமுக தடை விதிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் திரையிடப்படும். பாதுகாப்பு தரப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைத்து வருகிறது.





