--- --:--:-- --

கிரஷர் இயந்திரத்தில் சிக்கி வடமாநில தொழிலாளி உயிரிழப்பு..!

8

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அய்யர்மலை கல்குவாரியில் கிரஷர் இயந்திரத்தில் சிக்கி வட மாநில தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தனியார் ஜல்லி உடைக்கும் கிரஷரில் தங்கி பணியாற்றி வருகிறார் அசாம் மாநிலத்தை சேர்ந்த நபர்.

 

இவர் கிரஷர் இயந்திரத்தை துடைக்கும் பொழுது எதிர்பாராத விதமாக பெல்டில் சிக்கிய இடது கையை இழுக்கும் பொழுது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

 

அங்கிருந்தவர்கள் உயிரிழந்தவரின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவரின் உறவினர் அளித்த புகாரில் சூப்பர்வைசர்கள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon