கண்ணாமூச்சி விளையாடிய சிறுமி மீது துப்பாக்கி சூடு..!
கண்ணாமூச்சி விளையாடிக்கொண்டிருந்த சிறுமி மீது ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தியதில் 14 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். லூசியான பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதி ஒன்றில் 58 வயது முதியவரின் இடத்தில் சில குழந்தைகள் கண்ணாமூச்சி விளையாடியுள்ளனர்.
வெளியில் நிழல் தெரிவதை கண்டு வேறு யாரோ தன்னிடத்தில் புகுந்து விட்டதாக எண்ணி அந்த முதியவர் துப்பாக்கி சூடு நடத்தியதில் சிறுமி பலியாகியுள்ளார். அதையடுத்து அந்த முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





