--- --:--:-- --

உண்மை கண்டறியும் சோதனைக்கு வருவாரா? மல்யுத்த வீராங்கனை சவால்..!

5

பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டில் உண்மை கண்டறியும் சோதனைக்கு வருமாறு இந்திய மல்யுத்த கூட்டமைப்பின்  தலைவருக்கு மல்யுத்த வீராங்கனை ஷாக்சி மாலிக் சவால் விடுத்துள்ளார்.

 

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் மீதான பாலியல் குற்றச்சாட்டு விவகாரம் தொடர்ந்து விஸ்வரூபம் எடுத்து வருகிறது. அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி டெல்லியில் மல்யுத்த வீரர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

அந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மல்யுத்த வீராங்கனை ஷாக்சி மாலிக் உண்மை கண்டறியும் சோதனைக்கு தன்னை உட்படுத்தி தன்னை நிரபராதி என நிரூபிக்க தயாரா என சவால் விடுத்துள்ளார்.

 

பூஷன் தலைமையில் போட்டிகள் நடத்தப்படக்கூடாது என்றும் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தற்காலிக குழுவில் போட்டிகளை நடத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon