நீலகிரி பிளஸ் டூ தேர்வில் மாணவர்களுக்கு உதவிய ஆசிரியர் விவகாரம்.. 5 ஆசிரியர்களிடம் விசாரணை..!
நீலகிரி மாவட்டம் உதகை அருகே தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களுக்கு உதவிய ஆசிரியர்கள் ஐந்து பேரிடம் கல்வித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த மார்ச் 27ஆம் தேதி வரை நடைபெற்ற பிளஸ் டூ கணித தேர்வின் போது சாம்ராஜ் பள்ளியில் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் உதவியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் இரண்டு அறைகளில் தேர்வு எழுதிய 34 மாணவர்களின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக தேர்வு பணியில் ஈடுபட்டிருந்த கல்வித்துறை அலுவலர்கள் முதன்மை கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட ஐந்து பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். அவர்களிடம் கோவை மற்றும் ஏலகிரி மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர்கள் விசாரணை நடத்தினர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





