--- --:--:-- --

அமைச்சர் கார் விபத்து.. பைக் ஓட்டி வந்த நபர் மீது வழக்குப்பதிவு..!

13

கடலூர் நெல்லிக்குப்பம் அருகே நேற்று இரவு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சென்ற கார் விபத்துக்குள்ளானது. இரண்டு சக்கர வாகனத்தில் வந்த ஜோதி என்ற நபர் திடீரென குறுக்கில் வந்ததால் கார் மீது இரண்டு சக்கர வாகனம் மோதியது.

 

இந்த விபத்தில் இரண்டு சக்கர வாகனத்தில் வந்த ஜோதி படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் அமைச்சர் பொன்முடியின் கார் ஓட்டுனர் ரகுபதி கொடுத்த புகாரின் அடிப்படையில் இரண்டு சக்கர வாகனத்தில் வந்த நபர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர் நெல்லிக்குப்பம் போலீசார்.

 

மது போதையில் இரண்டு சக்கர வாகனத்தில் வந்த நபர் அஜாக்கிரதையாக வாகனத்தை ஓட்டி அமைச்சர் கார் மீது மோதி கார் சேதமடைந்ததாக புகார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon