கழுத்தில் இருந்த செயின் திருட்டு..!
சென்னை புழல் அடுத்த பகுதியில் அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் பூசாரி கடந்த மூன்றாம் தேதி காலை வழக்கம் போல பூஜைகளை முடித்துவிட்டு காலை உணவுக்காக சென்றுள்ளார்.
மீண்டும் வந்து பார்த்த பொழுது அம்மன் கழுத்தில் இருந்து நான்கு சவரன் தாலிச் சங்கிலி காணாமல் போனது தெரிய வந்தது. இதுகுறித்து புழல் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.
ஒருவர் கோவிலில் வந்து சாமி கும்பிடுவது போல அக்கம் பக்கத்தில் யாருமில்லாத நேரத்தில் கருவறைக்கு சென்று அம்மன் படுத்திருந்த தங்கச்சங்கிலியை திருடிய காட்சி பதிவாகியுள்ளது. போலீசார் இந்த விசாரணை நடத்தினர்.
தெலுங்கானா மாநிலத்தில் விசாரணையில் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த நபர் ஈடுபட்டது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





