--- --:--:-- --

தாம்பரம் குடியிருப்பு பகுதிக்கு அருகே மின்மாற்றி வெடித்ததால் வாகனங்கள் சேதம்..!

2

சென்னை அடுத்த தாம்பரத்தில் அடுக்குமாடி குடியிருப்பின் மின்மாற்றி வெடித்ததில் வாகனங்கள் தீக்கிரையாகின. பல வீடுகளில் குளிர்சாதன பெட்டிகள் வெடித்ததால் பதற்றம் ஏற்பட்டது.

 

தாம்பரம் கடப்பேரி தெருவில் 18 வீடுகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. அதன் அருகில் உள்ள மின்மாற்றி திடீரென வெடித்து சிதறியது.

 

மின்மாற்றியின் அருகில் இருந்து அடுக்குமாடி குடியிருப்பிலும் தீ பற்றியதால் அங்கிருந்த இரு சக்கர வாகனங்கள் எரிந்து எலும்புக்கூடு போல் காட்சி அளித்தன. இருப்பினும் குடியிருப்புகளில் உள்ள குளிர்சாதன பெட்டிகளும் வெடித்து சிதறியதால் பதற்றம் ஏற்பட்டது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon