--- --:--:-- --

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி மன்னிப்பு கேட்க சந்திரபாபு நாயுடு வலியுறுத்தல்..!

2

நடிகர் ரஜினிகாந்த் தொடர்பாக ஆந்திரா அமைச்சர் ரோஜா பேசிய விவகாரம் தொடராக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி மன்னிப்பு கேட்க வேண்டும் என முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு வலியுறுத்தியுள்ளார்.

 

விஜயவாடாவில் நடந்த எம்.பி. நூற்றாண்டு விழாவில் அவர் குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேசியதை ஆந்திரா அமைச்சர் ரோஜா விமர்சித்திருந்தார்.

 

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கும் சந்திரபாபு நாயுடு இது போன்ற தேவையில்லாத விமர்சனங்களை தெலுங்கு மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

 

தனது கட்சியினரை ஜெகன்மோகன் ரெட்டி கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon