12 மணி நேர வேலை சட்ட மசோதா வாபஸ்..!
12 மணி நேர வேலை சட்ட மசோதா வாபஸ் பெறப்பட்டுள்ளது என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தொழிலாளர் தின நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
விட்டுக் கொடுப்பதை நான் என்றும் அவமானமாக கருதவில்லை என முதலமைச்சர் மசோதா திரும்ப பெறப்பட்டது தொடர்பாக அனைத்து எம்எல்ஏக்களுக்கும் தெரிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். திமுக ஆட்சி கொண்டு வந்த மசோதாவை திமுக தொழிற்சங்கமே எதிர்த்ததை பாராட்டுகிறேன் என மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





