லண்டன் விமானம் திடீரென தரையிறக்கம்.. பயணி செய்தது அதிர்ச்சி செயல்..!
டெல்லியில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் டெல்லி திரும்பியது. விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் விமானம் கிளம்பி நடுவழியில் பயணி ஒருவர் கேபின் பணியாளர்கள் இருவரை காயப்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் விமானம் மீண்டும் டெல்லியில் தரையிறக்கப்பட்டு பயணிகள் பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.





