--- --:--:-- --

இளைஞர் மீது மீண்டும் மீண்டும் வந்து மோதிய கார்..!

1

கேரள மாநிலம் கொல்லத்தில் இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அவரின் பின்னால் இருந்து வந்த கார் ஒன்று இருசக்கர வாகனத்தின் மீது மோதி விட்டு பறந்தது.

 

கீழே விழுந்த இளைஞரை மற்றவர்கள் மீட்டபொழுது திரும்பவும் சம்பவ இடத்திற்கு வந்த அந்த கார் அந்த இளைஞர் மீது மோதி கொலை செய்யும் முயற்சித்தது. ஆனால் அந்த இளைஞர் நகர்ந்து சென்றதால் உயிர் பிழைத்தார்.

 

இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் தற்பொழுது விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon