தாத்தா இறப்பை vlog செய்து போட்ட யூடியூபர்..!
இந்தியாவை சேர்ந்த யூடியூபர் ஒருவர் தனது தாத்தாவின் இறுதி சடங்கு நிகழ்வை vlog செய்த சம்பவம் விமர்சனத்திற்கு உள்ளாக்கியுள்ளது. தற்போதைய காலத்தில் சமூக வலைதளங்கள் மூலமாக பலரும் பிரபலம் அடைவதோடு பணமும் சம்பாதித்து வருகின்றனர்.
அதிக லைக்ஸ்களுக்காகவும், கருத்துகளுக்காகவும் வித்தியாசமாக எதையாவது பதிவிட்டுக்கொண்டு பல கோமாளித்தனங்களை செய்து கொண்டு வருகின்றனர். அது போல் ஒரு சம்பவத்தை தான் யூடியூபர் ஒருவர் செய்திருக்கிறார்.
தனது தாத்தாவின் இறப்பின் போது நடத்தப்பட்ட இறுதி சடங்கு அனைத்தையும் நண்பர்களோடு சேர்ந்து vlog செய்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது என்பதுதான் துன்பகரமான விஷயமாகும். youtube இல் சுமார் 4 லட்சம் சந்தாதாரர்களை கொண்ட நபர் youtube பக்கத்தில் வித்தியாசமான வீடியோக்களை பதிவிட்டு அதன் மூலம் பிரபலமானவர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





