பேரழிவை சந்திக்க போகும் பூமி..!
காலநிலை மாற்றம் காரணமாகவும் அதிகரித்து வரும் நுகர்வு கலாச்சாரத்தினாலும், உலக அளவில் தண்ணீருக்கு நெருக்கடி ஏற்படும் அபாயம் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
இது குறித்து ஐநா வெளியிட்டுள்ள அறிக்கையில் உலக நாடுகள் ஒரு ஆபத்தான பாதையில் பயணிக்கின்றன என்றும் நுகர்வு கலாச்சாரம், காலநிலை மாற்றம், அதிதீவிர வளர்ச்சியால் தண்ணீர் நெருக்கடி ஏற்படும் அபாயம் உள்ளது என்றும் கூறுகின்றனர்.
மேலும் அதிகப்படியான நுகர்வு மற்றும் மாசு கட்டுப்பாட்டின் காரணமாக நீர் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. மேலும் அதே சமயம் காலநிலை மாற்றங்களும் புவி வெப்பமடைதல் அதிகரித்து நீர் பற்றாக்குறையை தீவிரமாக்கி வருகின்றன.
ஆண்டுக்கு 300 கோடி மக்கள் நீர் நெருக்கடியில் வாழ்கின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஐநாவின் பொது செயலாளர் செய்தி ஒன்றை கூறியுள்ளார். மனித குலத்தின் உயிர்நாடி ஆன நீர் மாசினாலும் காலநிலை மாற்றத்தினாலும் மாறி வருகிறது எனவும் இந்த நிலை இப்படியே நீண்டால் உலகம் பேரழிவை சந்திக்கும் என்றும் கூறியிருக்கிறார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





