மதுபோதையில் திருவண்ணாமலை கோயிலுக்குள் புகுந்து ரகளை செய்த நபர்..!
திருவண்ணாமலை கோயிலுக்குள் கத்தியுடன் புகுந்து ரகளை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்குள் கத்தியுடன் போதை ஆசாமி கோபுர வாசல் வழியாக நுழைந்துள்ளார்.
பின்னர் கோயிலுக்கு வந்த பக்தர்களை நோக்கி பயமுறுத்தி அங்குமிங்கும் ஓடியதால் பக்தர்கள் பீதி அடைந்து ஓடி உள்ளனர். பின்னர் அங்கிருந்த இரண்டு இளைஞர்கள் அவனை மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
பின்னர் காவல் நிலையம் அனைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர் போதை அதிகமாக உட்கொண்ட காரணத்தினால் அவ்வாறு செய்ததாக தெரிகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





