--- --:--:-- --

உயிரிழந்த மனைவிக்கு கோயில் கட்டி கும்பிடும் அதிசய கணவர்..!

5

திருப்பத்தூர் அருகே உயிரிழந்த மனைவிக்கு ஆறு அடிக்கு சிலை வைத்துள்ளார் அவரது கணவர். கோவில்பட்டி திருப்பத்தூர் அடுத்த மாங்கனூர் பகுதியை சேர்ந்த சுப்ரமணி – ஈஸ்வரி தம்பதிக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடந்தாண்டு மனைவி ஈஸ்வரி உயிரிழந்தார்.

 

35 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த மனைவியின் நினைவாக அவருக்கு சிலை வைத்து கோவில் கட்டியுள்ளார் கணவர் சுப்பிரமணி. அத்துடன் கோயிலில் தினமும் இரண்டு வேளை பூஜை செய்து வணங்கி வருகிறார். சுப்பிரமணியனின் இந்த செயல் அந்த பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon