--- --:--:-- --

அந்தியூரில் பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் மீது உடனடி தீர்வு காணும் துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது..!

3.1

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேரூராட்சி அலுவலகத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏஜி வெங்கடாசலம் தலைமையில் பேரூராட்சி பொதுமக்களின் விண்ணப்பம் மற்றும் கோரிக்கை மனுக்கள் மீதான உடனடி தீர்வு செய்தல் துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

 

இந்த நிகழ்ச்சியில் பேசிய அந்தியூர் எம்எல்ஏ ஏஜி வெங்கடாசலம், அந்தியூர் பேரூராட்சியில் வசிக்கும் பொது மக்களின் கோரிக்கை அடங்கிய மனுக்கள் மீது உடனடி தீர்வு காணும் பொருட்டு இந்த திட்டத்தை உருவாக்கியுள்ளதாகவும், பிறப்பு, இறப்பு, பெயர் மாற்றம், கட்டிட வரைபட உரிமம், சொத்து வரி நிர்ணயம் செய்தல், குடிநீர் குழாய் பழுது சரி செய்தல் ஆகிய கோரிக்கைகளுக்கு உடனடியாக தீர்வு செய்யப்படும் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் கோவை மண்டல செயற்பொறியாளர் ஜெகதீஸ்வரி, மாவட்ட உதவி செயற்பொறியாளர் கணேசன், அந்தியூர் பேரூராட்சி தலைவர் பாண்டியம்மாள், துணை தலைவர் பழனிச்சாமி, செயல் அலுவலர் செல்வகுமார், மற்றும் பேரூராட்சி மன்றத் தலைவர்கள், செயல் அலுவலர்கள், பேரூராட்சி கவுன்சிலர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

மேலும் இந்த நிகழ்ச்சியில் கோரிக்கை மனு வழங்கிய 10க்கும் மேற்பட்டோருக்கு உடனடி தீர்வு சம்பந்தமான ஒப்புகை சீட்டு வழங்கப்பட்டது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon