கோவில் கருவறைக்குள் புகுந்த ஆறடி நீளம் உள்ள கண்ணாடிவிரியன் பாம்பு..!
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா பேட்டை அருகே உள்ள கோயில் கருவறைக்குள் ஆறடி நீளம் உள்ள கொடிய விஷம் வாய்ந்த கண்ணாடி விரியன் பாம்பு வந்தது.
கோயிலுக்கு வந்த பக்தர்கள் சிலர் சாமியாடியும் அந்த விஷ பாம்புக்கு பால் ஊற்றி, சூடம் ஏற்றி, சக்கரை பொங்கல் வைத்தும் வழிபட்டனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் பின்புறமாக பதுங்கி இருந்த கண்ணாடிவிரியின் பாம்பை லாவகமாக பிடித்து காப்பு காட்டில் விட்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





