--- --:--:-- --

திருநங்கை உடலை நல்லடக்கம் செய்த போலீசார்..!

8

நெல்லை மாவட்டம் பழங்குடியில் கடந்த ஓராண்டில் ஆதரவற்ற நிலையில் உயிரிழந்த 13 பேரை நல்லடக்கம் செய்த போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

 

பணகுடி காவல் நிலையத்தில் பணியாற்றும் போலீசார் பணகுடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்த ஆதரவற்றவர்களின் உடல்களை அவரவர் சமுதாய முறைப்படி அடக்கம் செய்து வருகின்றனர்.

 

அதன்படி நேற்று பணங்குடியை சேர்ந்த ஆதரவற்ற திருநங்கை ஒருவரின் உடலை போலீசார் நல்லடக்கம் செய்தனர். கடந்த 14 மாதங்களில் ஆதரவற்ற 13 பெண் உடல்களை அடக்கம் செய்திருந்த போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon