--- --:--:-- --

சாலையில் பாலை ஊற்றி போராட்டம் நடத்திய பால் உற்பத்தியாளர்கள்..!

7

ஈரோட்டில் ஆவின் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க பால் உற்பத்தியாளர்கள் சாலையில் கொட்டி சாலை மறியலில் ஈடுபட்டனர். பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்று பால் உற்பத்தியாளர்கள் வலியுறுத்தி வந்தனர்.

 

இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சாங்க நிர்வாகிகளுடன் சென்னை தலைமை செயலகத்தில் பால்வளத்துறை அமைச்சர் நாசர் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்படாததால் பால் உற்பத்தியாளர்கள் இன்று ஆவின் நிறுவனத்திற்கு பால் அனுப்பாமல் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

 

ஈரோடு மாவட்டத்தில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க பால் உற்பத்தியாளர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்பொழுது பாலை சாலையில் ஊற்றி கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon