--- --:--:-- --

அதிகரிக்கும் கொரோனா..தமிழக அரசுக்கு மத்திய சுகாதாரத்துறை கடிதம்..!

1.1

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவது தொடர்பாக மாநில அரசுக்கு மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார். தமிழகம் மட்டும் இன்றி மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, கேரளா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களுக்கும் மத்திய சுகாதாரத்துறை கடிதம் அனுப்பியுள்ளது.

 

குறிப்பிட்ட மாநிலங்களில் அதிக எண்ணிக்கையில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் மார்ச் 1ம் தேதி முதல் எட்டாம் தேதி வரை 170 ஆக இருந்த கொரோனா தொற்று மார்ச் 15இல் 758 ஆக உயர்ந்துள்ளது எனவும் அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon