அவிநாசியில் ஹான்ஸ், புகையிலை பொருட்கள் விற்பனை செய்தவர் கைது!
தமிழகத்தில் ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்களை போலீசார் அதிரடியாக கைது செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் அவினாசி வடக்கு ரதவீதியில் உள்ள ஒருமண்டபம் அருகே பேக்கரி முன் பெட்டி கடை வைத்து நடத்தி வரும் 53 வயதான சின்னதுரை என்பவர் அரசால் தடைசெய்யப்பட்ட ஹான்சை விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்படி போலீசார் அங்கு சென்று நீண்ட நேரம் சோதனை நடத்தியதில் புகையிலை பொருட்கள் கிடைக்கவில்லை. இருப்பினும் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டதில், மனிபர்சுக்குள் ஹான்ஸ் பாக்கெட் வைத்து விற்பனை செய்வது தெரியவந்தது.
எனவே அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் மேலும் புகையிலை பொருட்களை பதுக்கிவைத்துள்ளாரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




