திருச்சிக்கு வந்த இளைஞரின் வயிற்றில் இருந்த பிளேடுகள்..!
குழந்தைகள், மனநலத்தால் பாதிக்கப்பட்ட பெரியவர்கள் சிலர் சில்வர் நாணயங்களை விழுங்குவது போன்ற பல விசித்திரமான நிகழ்வுகள் அவ்வப்போது வெளியே தெரிவதுண்டு. அந்த வகையில் ராஜஸ்தானை சேர்ந்த இளைஞர் ஒருவரது வயிற்றில் கிட்டத்தட்ட 56 பிளேடுகள் இருந்ததை கண்டு மருத்துவர்கள் அதிர்ந்து போயிருக்கிறார்கள்.
ராஜஸ்தானில் சன்சூர் மாவட்டத்தில் உள்ள தட்டாகிராமத்தில் வசித்து வருபவர் 27 வயதான நபர். தன்னுடைய மற்ற நான்கு நண்பர்களுடன் சேர்ந்து ஒரே வீட்டில் வசித்து வருகிறார். வீட்டில் இருந்தபொழுது திடீரென இரத்த வாந்தி எடுத்ததை அறிந்து சக நண்பரிடம் தெரிவிக்கவே உடனடியாக யாவர் அருகில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
முதலில் எக்ஸ்ரே எடுத்து பார்த்த மருத்துவருக்கு அவரின் வயிற்றில் ஏதோ உலோகம் இருப்பது தெரிய வந்ததால் எண்டோஸ்கோபி சோதனை மேற்கொண்டதன் மூலம் அவரின் வயிற்றில் எண்ணற்ற பிளேடுகள் இருந்ததை கண்டறிந்திருக்கிறார்கள்.
இதனையடுத்து எந்த தாமதமும் இன்றி உடனே அறுவை சிகிச்சை மேற்கொண்டு அவரின் வயிற்றில் இருந்த பிளேடுகள் அனைத்தையும் வெளியேற்றி இருக்கிறார்கள். இது குறித்து பேசி இருக்கும் மருத்துவர் அவர் தற்போது நலமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





