--- --:--:-- --

மீண்டும் சென்னை வருகிறாரா பிரதமர் மோடி..?

1

சென்னை விமான நிலையத்தில் விரிவாக்கம் செய்யப்பட்ட புதிய முனையத்தை பிரதமர் நரேந்திர மோடி 27ஆம் தேதி திறந்து வைக்க உள்ளதாக சென்னை விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

சென்னை விமான நிலையத்தில் மக்கள் பயன்பாட்டை கருத்தில் கொண்டு சர்வதேச தரத்துடன் டி2 முனையில் விரிவாக்கம் செய்யப்பட்டது. இந்த புதிய முனையத்தின் கூரை பகுதி பரதநாட்டிய கலைஞரின் நடன அமைப்புகள் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

அத்துடன் தமிழகத்தின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் ஓவியங்களும் இடம்பெற்றுள்ளன. 27ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி இதனை திறந்து வைக்கும் நிலையில் சென்னை விமான நிலையத்தை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon