--- --:--:-- --

நடிகர் பவர்ஸ்டாருக்கு நேர்ந்த சோகம்..!

7

காமெடி நடிகரான பவர் ஸ்டார் தற்பொழுது பிக்கப் டிராப் என்ற படத்தில் வனிதா விஜயகுமாருடன் இணைந்து நடித்து வருகிறார்.

 

சமீபத்தில் உடல் நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் தற்பொழுது உடல்நலம் தேறி அளித்துள்ள பேட்டியில் பணம் இருந்த சமயத்தில் தன்னுடன் பலரும் சுற்றிய பொழுது தனக்கு பின்னாலும் நான்கு பேர் இருக்கிறார்கள் என சந்தோஷப்பட்டதாகவும் ஆனால் பணம் போன பிறகு அவர்கள் தன் பக்கம் திரும்ப வராதது குறித்தும் பேசினார்.

 

மேலும் படம் பற்றி பேசுவதற்காக ஹோட்டல் ஒன்றுக்கு வரச் சொல்லி தன்னுடைய சொந்த சொத்துக்காக தன்னை கடத்தியதாக கூறினார். பவர்ஸ்டாரின் இந்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon