கடலூரில் பாமக சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம்..!
என்எல்சி நிர்வாகத்தினர் நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடலூரில் இன்று நடைபெற உள்ள முழு அடைப்பு போராட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவளிக்க வேண்டும் என்ற பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளார். என்எல்சிக்கும் கடலூர் மாவட்ட நிர்வாகத்திற்கும் பாடம் புகட்டுவதற்காக இந்த போராட்டம் நடத்தப்படுவதாகவும் இதற்கு உழவர்கள், வணிகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் முழு ஆதரவளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





