--- --:--:-- --

வயிறு வலியால் துடித்த குடிமகன்.. வயிற்றில் இருந்த மது பாட்டில்..!

3

நேபாளத்தில் இளைஞரின் வயிற்றுக்குள் மதுபான பாட்டில் இருந்ததால் மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அறுவை சிகிச்சை மூலம் வயிற்றிலிருந்த பாட்டில் அகற்றப்பட்டது. நேபாள நாட்டின் குஜரா நகரை சேர்ந்த மன்சூர் என்ற இளைஞர் கடந்த சில தினங்களாக கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

 

தாங்க முடியாத வலியால் தவித்த இளைஞர் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்துள்ளார். அப்பொழுது அவரது அடிவயிற்றில் மதுபான பாட்டில் இருப்பதை கண்டு மருத்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து இளைஞருக்கு உடனே அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வழக்கில் இருந்த மதுபான பாட்டில் அகற்றப்பட்டது.

 

இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து மன்சூரியன் என்பவரை கைது செய்துள்ளனர். மன்சூர் மதுபோதையில் இருந்த பொழுது அவரது நண்பர் ஆசனவாய் வழியாக பாட்டிலை வயிற்றில் சொருகியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பாட்டில் உடையாமல் இருந்ததால் பெரிதாக பாதிப்பு ஏற்படுத்தவில்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon