ஆம்புலன்ஸ் ஓட்டுனர் செய்த நெகிழ்ச்சி செயல்..!
செஞ்சி அருகே விபத்திற்குள்ளான தனியார் பால் வாகனத்தில் இருந்து பணத்தை உரிமையாளரிடம் ஒப்படைத்த அரசு மருத்துவமனை ஆம்புலன்ஸ் ஓட்டுனருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் இயங்கி வரும் தனியார் பால் நிறுவனத்திலிருந்து பால் ஊற்றி சென்ற பால் வாகனம் மங்கலம் கிராமத்தில் வந்த பொழுது சாலையில் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது.
இதில் ரமேஷுக்கு கால் முறிவு ஏற்பட்ட நிலையில் தனியார் கிளீனர் சூர்யா வாகனத்திற்கு உள்ளே சிக்கிக்கொண்டார். இது குறித்த சம்பவ இடத்திற்கு வந்த 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் செல்வமணி இருவரையும் ஏற்று மருத்துவமனையில் அனுமதித்தார்.
பின்னர் விபத்துக்குள்ளான பால் வாகனத்தில் இருந்த 10,386 ரூபாய் பணத்தை ஆம்புலன்ஸ் ஓட்டுகின்ற செல்வமணி பால் வாகன ஓட்டுநர் ரமேஷிடம் பத்திரமாக ஒப்படைத்தார். ஆம்புலன்ஸ் ஓட்டுனரின் இந்த செயல் அனைவரிடமும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





