நடிகர் பெயரில் போலி பேஸ்புக் ஐடி..!
நடிகர் தர்ஷன் புகைப்படத்துடன் facebook உடன் இளம்பெண்ணில் பழகி அவரது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து மிரட்டி பணம் பறித்த சகோதரர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. காஞ்சிபுரத்தை சேர்ந்த அந்த பெண்ணிடம் நன்றாக பேசி பழகிய மர்மநபர் சில நாட்களில் அவரது செல்போன் எண்ணை வாங்கியுள்ளார்.
இருவரும் வாட்ஸப்பில் புகைப்படம் வீடியோ பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு சென்ற நிலையில் தனது சுய ரூபத்தை காட்டிய மர்மநபர் அந்த பெண்ணின் புகைப்படங்களை ஆபாசமாக மார்பிங் செய்து மிரட்டி இரண்டு லட்சம் ரூபாய் வரை ஜிபே மூலம் பறித்துள்ளார்.
மேலும் பணம் கேட்டு மிரட்டவே பெண் போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த வழக்கில் அலாவுதீன் மற்றும் அவரது சகோதரர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





