இரண்டு காதலிகளையும் ஒரே மேடையில் கரம் பிடித்த காதலன்..!
காதலித்த இரண்டு பெண்களையும் ஒரே மணமேடையில் இளைஞர் ஒருவர் திருமணம் செய்த சுவாரசிய சம்பவம் தெலுங்கானாவில் நிகழ்ந்துள்ளது. தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர் சட்டிபாபு. இவர் தனது மூன்று ஆண்டுகளாக வெவ்வேறு கிராமத்தை சேர்ந்த இரண்டு பெண்களை காதலித்து வந்துள்ளார்.
இது குறித்து மூன்று பேரின் வீட்டிற்கும் தெரிய வந்ததையடுத்து அவரவர் வீட்டாரின் சம்மதத்துடன் மூவருக்கு திருமணம் நடைபெற்றது. இரண்டு பெண்களும் வெவ்வேறு கிராமங்களை சேர்ந்தவர்கள் என்பதால் இருவரின் பேரையும் சேர்த்து திருமண அழைப்பிதழில் அச்சிடப்பட்டது.
காதலித்த இரண்டு பெண்களையும் ஒரே மணமேடையில் சட்டிநாடு திருமணம் செய்த சம்பவம் தெலுங்கானாவில் சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





