--- --:--:-- --

வெடித்த பிரிட்ஜ்.. காவல் ஆய்வாளர் உட்பட 2 பேர் பலி..!

4

கோயம்புத்தூர் மாவட்டம் நல்லூரில் பிரிட்ஜ் வெடித்ததால் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில் அந்த விபத்தில் சிக்கி காவல் ஆய்வாளர் உட்பட இரண்டு பேர் உயிரிழந்தனர்.

 

சென்னை அயனாவரம் காவல் நிலைய குற்றப்பிரிவு காவல் ஆய்வாளராக பணியாற்றிய சபரிநாத் என்பவர் விடுதியில் தங்கி படித்து வரும் தனது மகனை காண விடுப்பில் சொந்த ஊர் சென்றதாக கூறப்படுகிறது.

 

இன்று காலை வீட்டில் அவர் இருந்த பொழுது சமையல் செய்வதற்காக சாந்தி என்ற பெண் சென்ற நிலையில் பயங்கர சத்தம் ஏற்பட்டதாகவும் கீழ் வீட்டில் இருந்தவர்கள் சென்று பார்த்த பொழுது தீயில் இருவரும் எரிவது கண்டு அதிர்ச்சி அடைந்ததாகவும் கூறப்படுகிறது. விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என தீயணைப்புத் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon