--- --:--:-- --

விரைவில் ரூ.1,000.. தமிழக அரசு அதிரடி..!

5

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று மாலை கூடுகிறது. இதில் தமிழகத்தின் நிதிநிலை குறித்து ஆலோசிக்கப்பட்டு பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட உள்ளது.

 

தமிழக அரசின் 2023 – 2024 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் மார்ச் 20ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் முதலமைச்சரின் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மகளிர் உரிமைத் தொகை வழங்குவது மற்றும் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

 

மேலும் பட்ஜெட்டில் துறை வாரியாக அறிவிக்க வேண்டிய புதிய திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட உள்ளது. மேலும் தமிழகத்தில் புதிதாக தொழில் தொடங்க விருப்பம் தெரிவித்துள்ள நிறுவனங்களுக்கு அளிக்கப்பட உள்ள சலுகைகள் மற்றும் அனுமதி குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon