தமிழகத்தை அதிர வைத்த ஸ்ரீமதி வழக்கில் இறுதி முடிவு..!
கள்ளக்குறிச்சி மாணவி மரணம் அடைந்த வழக்கில் விசாரணை நிறைவடைந்துள்ளது என்று சிபிசிஐடி அறிவித்துள்ளது. இரண்டு வாரங்களில் இறுதி அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சியில் உள்ள கணியாமூர் பள்ளியில் மாணவி உயிரிழந்த விவகாரத்தில் தாயார் மற்றும் சிபிசிஐடி தரப்பில் தொடரப்பட்ட வழக்கு விசாரணை உயர் நீதிமன்றத்தில் நடைபெறுகிறது.
இதில் மாணவி பயன்படுத்திய செல்போன் குறித்து விசாரணை அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு இதனையடுத்து விசாரணை நிறைவடைந்து விட்டதாக சிபிசிஐடி போலீசார் நீதிமன்றத்தை தெரிவித்துள்ளனர்.
இறுதி விசாரணை அறிக்கை இரண்டு வாரங்களில் சமர்ப்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு மாற்றக் கோரி மாணவியின் தாயார் தொடர்ந்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மார்ச் 23ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





