குடிநீர் தொட்டிக்குள் விடப்பட்ட ஆமைகள்.. அதிர்ச்சியான குடியிருப்பு வாசிகள்..!
புதுச்சேரியில் குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பு குடிநீர் தொட்டிக்குள் ஆமைகளை விட்டு தண்ணீரை மாசு படுத்திய நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவிந்தர் சாலையில் உள்ள குடிசை மாற்று அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள குடிநீர் தொட்டியில் ஆமைகளை விட்டிருப்பதாக கொடுத்த தகவலின் பெயரில் மேலும் எம்எல்ஏ போலீசாருடன் வந்த ஆய்வு செய்தார்.
அப்பொழுது குடிநீர் தொட்டிக்குள் இரண்டு ஆமைகள் இருப்பது தெரிய வந்ததையடுத்து அதை மீண்டும் வனத்துறையிடம் ஒப்படைத்தனர். மேலும் குடிநீர் தொட்டிக்குள் ஆமைகளை விட்டு தண்ணீரை வீணடித்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல்துறையிடம் எம் எல் ஏ சார்பில் புகார் அளிக்கப்பட்டது,
📱 Share on WhatsApp 𝕏 Share on X





